விழுப்புரம் மாவட்டத்தில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சி தொடக்கம்
X

விழுப்புரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்

விழுப்புரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்

விழுப்புரம் சட்ட மன்ற அலுவலம் முன்பு திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சி எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த அன்பு சுவரை திறந்து வைத்து, கொரோனா காலத்தில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ்,மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பழைய பேருந்து நிலையம், வளவனூர் பேரூராட்சி ஆகிய இடங்களிலும் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!