விழுப்புரத்தில் இன்று மக்கள் நல பணியாளர்களை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்

விழுப்புரத்தில் இன்று மக்கள் நல பணியாளர்களை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்
X
Ponmudi Latest News - விழுப்புரத்தில் இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நல பணியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு வாழ்த்தினார்.

Ponmudi Latest News -தி.மு.க., ஆட்சியில் பொறுப்பேற்ற மக்கள் நலப் பணியாளர்கள், அ.தி.மு.க., ஆட்சியில் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.1996ல் தி.மு.க., ஆட்சி காலத்தில் ஊராட்சி வாரியாக, மக்கள் நல பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர். 2001 ல் வந்த அ.தி.மு.க., ஆட்சியில் மீண்டும் நீக்கப்பட்டனர்.

2006ல் தி.மு.க., ஆட்சியில் மீண்டும் பணி அமர்த்தப்பட்டனர். 2011 ல் அ.தி.மு.க., ஆட்சியில் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதனிடையே தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்தநிலையில் இவர்கள் மீண்டும் பொறுப்பு ஏற்றனர்.


விழுப்புரம் தனியார் மண்டபத்தில் தமிழக அரசால் விழுப்புரம் மாவட்டத்தில் வேலையிழப்பு 577 மக்கள் நல பணியாளர்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தின்கீழ் மீண்டும் பணி வழங்கப்பட்டது,

விழுப்புரத்தில் அதற்கான அறிமுக விழா நடைபெற்றது, நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மக்கள் நல பணியாளர்களை வாழ்த்தி பேசினார்,

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன்,எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!