வேட்டிய மடிச்சு கட்டு: களத்தில் இறங்கிய அமைச்சர் பொன்முடி

வேட்டிய மடிச்சு கட்டு:   களத்தில் இறங்கிய அமைச்சர் பொன்முடி
X

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடி வேட்டிய மடித்து கட்டி களத்தில் இறங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரினை வெளியேற்றுவது தொடர்பாக அமைச்சர் பொன்முடி இன்று (08.11.2021) நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது வேட்டிய மடித்து கட்டிக் கொண்டு, பேருந்து நிலையத்தை பார்வையிடத் அவர் மழைநீர் வெளியேற உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார், அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கிரவாண்டி,விழுப்புரம் ஆகிய எம்எல்ஏக்கள்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர், வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!