விழுப்புரம் பகுதிகளில் அமைச்சர் பொன்முடி ஆய்வு

விழுப்புரம்  பகுதிகளில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
X

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பொன்முடி 

விழுப்புரம் நகராட்சி பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர் அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மகாராஜாபுரம் அருகிலுள்ள ஆசிரியர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் நீர் வெளியேறாமல் இருந்தது.

இன்று அந்த பகுதிகளுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பார்வையிட்டு அங்கு சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றப்படுவது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்,

அப்போது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுரேந்தர ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!