விழுப்புரம் நகராட்சியில் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரசாரம்

விழுப்புரம் நகராட்சியில் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரசாரம்
X

விழுப்புரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் அமைச்சர் பொன்முடி 

விழுப்புரம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அமைச்சர் பொன்முடி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விழுப்புரம் நகராட்சியில் 41-வது வார்டில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமமூர்த்தியை ஆதரித்து இன்று பெரியார் நகரில் அமைச்சர் பொன்முடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,

அப்போது விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி,மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.இராதாகிருஷ்ணன், ஆர்.மூர்த்தி, வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ் பிரகாஷ், நகர செயலாளர் மேகநாதன், அரசுப் போக்குவரத்துக் கழக ரகோத்மன் மாவட்ட குழு உறுப்பினர் வீரமணி, விவசாய சங்க அபிமன்னன் மற்றும் திமுக, காங்கிரஸ், உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது