விழுப்புரத்தில் சமுதாய வளைகாப்பு விழா

விழுப்புரத்தில் சமுதாய வளைகாப்பு விழா
X

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சீர் வரிசை வழங்கும் அமைச்சர் பொன்முடி 

விழுப்புரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் சீர்வரிசையினை வழங்கினார். மாவட்ட கலெக்டர் த.மோகன்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future