விழுப்புரத்தில் மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
X

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இன்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் முன்பு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது,

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாரத்தான் ஓட்ட பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

எம்பி கௌதமசிகாமணி, எம்எல்ஏக்கள் டாக்டர் லட்சுமணன்,நா.புகழேந்தி, மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் ஜெயசந்திரன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!