மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
X

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய  அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.25,000-த்திற்கான திருமண நிதியுதவி காசோலையினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாளிகளுக்கு இன்று (09.12.2021) வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai marketing future