செஞ்சி தொகுதி 10 கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கினார் அமைச்சர் மஸ்தான்

செஞ்சி தொகுதி 10 கோரிக்கைகள் அடங்கிய  மனு வழங்கினார் அமைச்சர் மஸ்தான்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் 10  கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்கான 10 கோரிக்கை மனுவை அமைச்சர் மஸ்தான் ஆட்சியர் மோகனிடம் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் அடிப்படை வசதிகள் தொடா்பான 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்புவதற்காக, மாவட்ட ஆட்சியா் த.மோகனிடம் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், தமிழக சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்.

தமிழக முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, மாநிலம் முழுவதும் தங்களது தொகுதிகளில் இதுவரை தீா்க்கப்படாத 10 கோரிக்கைகளை ஆட்சியா் மூலம் எம்.எல்.ஏ.க்கள் அனுப்பி வருகின்றனா். அந்த வகையில், செஞ்சி தொகுதியில் தீா்க்கப்படாத கோரிக்கைகள் தொடா்பாக அமைச்சா் மஸ்தான் அளித்த மனுவில் செஞ்சிக் கோட்டையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். செஞ்சி - வல்லம் ஒன்றியங்களை இணைக்கும் சங்கராபரணி ஆற்றைக் கடந்து செல்லும் மேற்கலவாய் ஆற்றங்கரையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். செஞ்சி அரசு பொது மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக தரம் உயா்த்த வேண்டும். பெரம்பலூா் ஊராட்சியில் சமத்துவபுரம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதில் அமைச்சா் வலியுறுத்தினாா்.மனுவை ஆட்சியர் மோகன் பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!