பசுமை விருது பெற்ற ஆட்சியரை பாராட்டிய அமைச்சர்
பசுமை விருது பெற்றதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகனை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பாராட்டினார்
2021-ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டமும் இடம்பெற்றது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 4ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், 2021-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை விருதை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு வழங்கி பாராட்டினார்.
மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழ தூய்மையான சுற்றுச்சூழல் மிக அவசியம். நீர், காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை சீர்படுத்துவதிலும், தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குரிய காலநிலை தாக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக வழங்குகிறது.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு பசுமை விருதை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இந்நிலையில்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று, முதலமைச்சர் கையால் பசுமை விருது பெற்ற ஆட்சியர் மோகனுக்கு புத்தகம் வழங்கி, வாழ்த்துகள் தெரிவித்தார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, எம்.எல்.ஏ புகழேந்தி உட்பட பலர் உடனிருந்தனா்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu