விழுப்புரம் அருகே 20 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் அருகே 20 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து
X

பைல் படம்.

விழுப்புரம் ஜானகிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 20 அடி பள்ளத்தில் மினி லாரி ஒன்று கவிழ்ந்ததில் ஆபத்தான நிலையில் ஓட்டுநர் மீட்கப்பட்டார்.

சென்னை மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணன் டிரைவர், இவர் தனது மினி லாரியில் இன்று காலை மரப் பொருள்களை ஏற்றி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அப்போது விழுப்புரம் ஜானகிபுரம் புரவழிச்சாலையில் மினி லாரி வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் அருகே இருந்த 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி டிரைவர் போராடிக் கொண்டிருந்தார். இதனை அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி ஜேசிபி பொக்லைன் மூலம் மினி லாரியில் சிக்கியிருந்த டிரைவர் சாய் கிருஷ்ணனை மீட்டனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!