100 நாள் வேலையில் நெடுஞ்சாலை வேலையா?
நூறு நாள் வேலைத்திட்டத்தில் நெடுஞ்சாலை பணியை பார்க்கும் கிராம மக்கள்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமானடி ஊராட்சியில் திங்கட்கிழமை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் அவ்வூராட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி உள்ளது,
அந்த ஊராட்சி பகுதியில் பணி செய்ய வேறு இடம் இல்லையோ என்னமோ தெரியவில்லை, கணக்கு காட்டுவதற்காக சுங்கவரி கட்டணத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் செய்ய வேண்டிய ஜானகிபுரம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள புல்லை எடுத்துக் கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு நீர்வரத்து வாய்க்கால்கள் அடைபட்டு வெள்ள நீர் அடிக்கடி ஊருக்குள்ளும், வயலுக்குள்ளும் புகுந்து விடுகிறது என்ற நிலையில், அதனை சரிசெய்ய 100 வேலை பணியாளர்களை உபயோகப்படுத்தாமல், இது போன்ற வேலைகளில் பயன்படுத்தகூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu