இருளர்களின் இடத்தை மீட்டுத் தரக்கோரி கலெக்டரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு
இருளர்களின் இடத்தை மீட்டுத் தரக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த எம்பி ரவிக்குமார்
இருளர்களின் இடத்தை மீட்டுத் தரக்கோரி விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் 1994 இல் பழங்குடி இருளர்களுக்காக அரசு இலவச வீட்டு பட்டா வழங்கினர், அந்த இடம் தற்போது ஆக்கிரிமிபு செய்யபட்டு உள்ளது, அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தை மீண்டும் பட்டாவுக்கு உரிய இருளர் இன பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகனிடம் கோரிக்கை அடங்கிய மனுவை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அளித்தார்.
மனுவைப்பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மோகன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது, பேராசிரியர் கல்யாணி, வழக்கறிஞர் லூசினா, ரஃபேல், பழங்குடி இருளர் சங்கத்தை சேர்ந்த சிவகாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu