சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை
X

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மீண்டும் வழங்க வேண்டும் என செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்

விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதன் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்பு நடைபெறும் துணை தலைவர்கள் தேர்வுகளில் எஸ்சி எஸ்டி மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ படிப்பில் சாதி மறுப்பதிருமணம் செய்தவர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பிரபு, மாநில இணைச்செயலாளர் மங்காபிள்ளை, மாநில பொருளாளர் கௌரி சங்கர், கொள்கை பரப்பு செயலாளர் தன்ராஜ், மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!