விழுப்புரத்தில் நாய்களுக்கு உணவு அளித்த செய்தியாளர்

விழுப்புரத்தில் நாய்களுக்கு உணவு அளித்த செய்தியாளர்
X

விழுப்புரத்தில் நாய்களுக்கு உணவு 

விழுப்புரத்தில் ஊரடங்கில் உணவின்றி சுற்றி திரியும் நாய்களை கண்டு அதற்கு உணவு அளித்த செய்தியாளர் செயல் பாராட்டப்பட்டது வருகிறது,

விழுப்புரம் நகரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன், இவர் ஒரு தனியார் மீடியாவில் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் இந்த ஊரடங்கு காலத்தில் உணவுக்காக தவிக்கும் தெரு நாய்கள் மீது கருணை கொண்டு தன் இரு சக்கர வாகனத்தில் உணவு பொருட்களை வைத்து கொண்டு தான் செல்லும் இடங்களில் எங்கே தெரு நாய்களை கண்டாலும் அவற்றிற்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால் இந்த உதவியை கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் யாருக்கும் தெரியாமல் செய்து வந்தார். தற்போது அது வெளி உலகிற்கு தெரிந்து அவருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி