நானும் ரவுடி தான்: சிறைச்சாலை முன்பு எடுத்த வீடியோ வைரல்

நானும் ரவுடி தான்:  சிறைச்சாலை முன்பு எடுத்த வீடியோ வைரல்
X

சிறைச்சாலை முன்பு காலரை தூக்கி விட்டு வரும் வாலிபர்

விழுப்புரம் அருகே வேடம்பட்டியில் உள்ள சிறைச்சாலை முன்பு, நானும் ரவுடிதான் என்று ஒருவர் எடுத்த வீடியோ வைரல் ஆகி வருவதால் பரபரப்பு

விழுப்புரம் அருகே வேடம்பட்டு மத்திய சிறை வளாகம் முன்பாக 2 வாலிபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவில், தனது வாழ்க்கையில் தான் ரவுடி ஆவதே லட்சியம் என ஒரு வாலிபர் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய சிறைச்சாலை வாயிலில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக வாலிபர் ஒருவர் காலரை தூக்கி விட்டு எடுத்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய சிறைச்சாலை முன்பு இளைஞர் அவரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குற்றவாளிகளை சீர்திருத்தவும் மற்றும் குற்ற சம்பவங்களை முற்றிலும் குறைப்பதற்காகவும் உள்ள மத்திய சிறை வளாகம் முன்பே தற்போதுள்ள இளைய தலைமுறை வாலிபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மனவேதனை அளிக்கிறது என்று கூறுகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business