நூறுநாள் வேலையை ஆண்டுதோறும் வழங்கக்கோரி மாதர் சங்கத்தினர் தர்ணா

100 Days Work | Villupuram News
X

விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வாங்க கால தாமதப்படுத்தியதால் மாநில செயலாளர் பொன்னுத்தாயி தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்.

100 Days Work -விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வாங்க காலதாமதப்படுத்தியதைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

100 Days Work -நூறுநாள் வேலையில் சுழற்சி முறையில் வழங்குவதைக் கைவிடக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்: நூறுநாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலையை அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்,, உதவித்தொகை நிறுத்தப்பட்ட முதியோர் பயனாளிகளுக்கு மீண்டும் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நீண்ட காலமாக குடியிருக்கும் வீடுகளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், ஏழை குடும்ப அட்டையில் குறியீடு என்.பி.எச்.எச் என்பதனை பி.எச்.எச் என திருத்தம் செய்ய வேண்டும், அரசு நலத்திட்ட உதவிகளை தடையில்லாமல் வழங்க வேண்டும், குடும்பத்தலைவிக்கு மாத ரூபாய் ஆயிரம் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் தலைமை வகித்தார்.மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கே.தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் வி.உமாமகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் பி.இலக்கியலட்சுமி, மாவட்ட துணைச்செயலாளர் பி.சங்கீதா ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.மோகனிடம் நேரில் சந்தித்து மனு கொடுக்க முயற்சி செய்தனர். அப்போது போலீசார் அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் நெருங்க விடாமல் அலைகழித்தனர். அதனால் ஆத்திரமடைந்த மாதர் சங்க மாநில செயலாளர் பொன்னுத்தாய் தலைமையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வராண்டாவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன், அங்கு மாவட்ட கலால் ஆணையரும், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளருமான சிவாவை அனுப்பி வைத்தார், அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சிவா இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் பொன்னுத்தாயிடம் சமாதானப் பேச்சுநடத்தி கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மக்களின் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடப்பதை ஏற்று, மனு கொடுக்க வந்த அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது