விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் செல்போன் திருட முயன்றவர் கைது

விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் செல்போன் திருட முயன்றவர் கைது
X

பைல் படம்.

விழுப்புரம் அருகே லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருட முயன்ற சென்னையை சேர்ந்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் அருகே பேரங்கியூர் பகுதியைச் சேர்ந்தவர் சாரதி லாரி ஓட்டுனர். இவர் நேற்று வழக்கம் போல் லாரியில் வேலைக்கு சென்றவர். பின்னர் லாரியை விழுப்புரத்தில் இருந்து புதுவை செல்லும் வழியில் உள்ள ராகவன் பேட்டை அருகே சாலையோரமாக நிறுத்திவிட்டு வேலை பார்த்த அசதியில் லாரியில் படுத்து உறங்கினார்.

அப்போது அதிகாலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் லாரியில் உறங்கிக் கொண்டிருந்த சாரதியிடமிருந்து செல்போனை திருட முயற்சித்தார். அப்போது திடுக்கிட்டு எழுந்த டிரைவர் சாரதி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து நெடுஞ்சாலை துறை போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த நபர் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஸ்ரீகுமார் (வயது 19) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!