ஆ.ராசா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மதுரை ஆதீனம்

ஆ.ராசா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த  மதுரை ஆதீனம்
X
திருவெண்ணெய்நல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், ஆ ராசா குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து எழுந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரில் உள்ள மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை ஆதீனம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் இந்துக்கள் பற்றி ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறாரே. ஒரு இந்துவாக உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு மதுரை ஆதீனம் அது குறித்து தான் எதுவும் கூற விரும்பவில்லை என பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதுரை ஆதீனத்திடம், இந்துக்களை இரண்டு விதமாக பிரித்திருக்கிறார்கள். நானும் இந்து தான் என்று ஆ.ராசா கூறியதை பற்றி கேள்வி எழுப்பினர். ஆனால் மதுரை ஆதீனம் இதற்கு பதில் அளிக்காமல்,வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள் என்று கூறினார்.

கேள்விக்கு முறையான பதில் அளிக்கவில்லை என செய்தியாளர் கேள்வி எழுப்பவே, கோபமடைந்த மதுரை ஆதீனம் எழுந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு, சலசலப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி