மண் சாலையாக மாறிய தார் சாலை: சரி செய்ய கோரிக்கை

மண் சாலையாக மாறிய தார் சாலை: சரி செய்ய கோரிக்கை
X

மண்சாலையாக மாறிய தார்சாலை 

கண்டமங்கலம் அருகே சேதமடைந்த தார் சாலையை சரி செய்து மீண்டும் சாலையமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய பாபுசமுத்திலிருந்து வனத்தாம்பாளையம் வரை செல்லும் தார் சாலை மண் சாலையாக மாறியதை சரி செய்ய அப்பகுதி மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரியபாபு சமுத்திரம் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக வனத்தாம்பாளையம் செல்லும் தார்சாலை மண் சாலை போல மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த சாலை சேறும் சகதியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவு மிக மோசமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வர பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரியபாபு சமுத்திரத்தில் இருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ஏரிக்கரை சாலையை பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரி குளங்கள் நிரம்பிய நிலையில் உபரிநீர் வெளியேறி வருவதால், அவை சாலைகள், வயல்கள் உள்ளிட்டவை வழியாக சென்று ஆறுகளிலும் குளங்களிலும் கலந்து வருகிறது

அதனால் ஏற்கனவே போடப்பட்ட தார் சாலைகள் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சேதம் அடைந்து வருகின்றன. எனவே இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்துள்ள தார் சாலைகள் மற்றும் கிராமப்புற சிமெண்ட் சாலைகள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு செய்து உடனடியாக சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business