விழுப்புரத்தில் தொடர்ந்து மழை, ஸ்தம்பித்த விவசாயிகள்

விழுப்புரத்தில் தொடர்ந்து மழை, ஸ்தம்பித்த விவசாயிகள்
X

விழுப்புரத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் விவசாயிகள் ஸ்தம்பித்த நிலையில் காணப்பட்டு வருகின்றனர்.

கடந்த இரு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த தொடர் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அறுவடை நேரத்தில் இது போன்று தொடர்மழை பெய்து வருவது விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைவதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!