விழுப்புரத்தில் டிராக்டரில் ஏற்றப்பட்ட கரும்பு லோடு சரிந்து பாதிப்பு

விழுப்புரத்தில் டிராக்டரில் ஏற்றப்பட்ட கரும்பு லோடு சரிந்து பாதிப்பு
X

விழுப்புரத்தில் டிராக்டரில் ஏற்றி செல்லப்பட்ட கரும்பு லோடு சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Traffic Accident- விழுப்புரத்தில் டிராக்டரில் ஏற்றப்பட்ட கரும்பு லோடு சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Traffic Accident- விழுப்புரத்தில் திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மேல்தெரு பகுதியில் சென்றபோது அதிக பாரம் தாங்க முடியாமல் டிராக்டரில் இருந்த கரும்பு கட்டுகள் கீழே சரிந்து நடுரோட்டில் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அதனை கண்ட டிராக்டர் டிரைவர், அந்த கரும்பு கட்டுகளை சாலையோரமாக அப்புறப்படுத்தி வைத்து விட்டு சென்றார். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இது கரும்பு அரவை பருவம் தொடங்கினாலே, அதிகளவு பாரத்தின் காரணமாக கரும்புகள் ஆலைக்கு ஏற்றி செல்லும் போது சரிந்து பாதிப்புக்குள்ளாவது தொடர் கதையாக நடந்து வருகிறது, அதனால் போக்குவரத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் டிராக்டர்களில் ஏற்றும் போது அகலப்படுத்தி கரும்புகளை ஏற்றாமல், குறிப்பிட்ட அளவு பாரம் மற்றும் நகர பகுதியின் உள்ளே வரும் போது கவனமாக செல்ல வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா