/* */

உயிர் காத்தவர்கள் விருது பெறலாம்: ஆட்சியர் அழைப்பு

News Awards - இயற்கை இடர்பாடுகள், அவசர காலங்களில் உயிர் காத்தவர்கள் மீட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

உயிர் காத்தவர்கள் விருது பெறலாம்: ஆட்சியர் அழைப்பு
X

மாவட்ட ஆட்சியர் மோகன்.

News Awards -இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானமிக்க பணிகளை செய்த, உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களை காத்த நபர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா, உத்தம் ஜீவன் ரக்‌ஷா மற்றும் ஜீவன் ரக்‌ஷா பதக் ஆகிய தொடர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தைரியம் மிகுந்த மற்றும் மனிதாபிமானமிக்க பணிகளை தாமதமின்றி உடனடியாக செய்து தனது அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவர்கள், நிலச்சரிவு, விபத்து மற்றும் நெருப்பில் சிக்கி காயமடைந்தவர்கள், மின் விபத்துகளில் சிக்கியவர்கள், விலங்கினால் தாக்கப்படுபவர்கள் மற்றும் சுரங்க விபத்துக்களில் சிக்கியவர்கள் ஆகியோரை உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.

சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடைய இத்தகைய வீர சேவைபுரிந்தவர்களை கவுரவிக்கும் விதத்திலும், இவர்களைப்போல் மற்றவர்களும் ஆபத்துக்காலத்தில் உதவிகள் புரிவதை ஊக்குவிக்கும் விதத்திலும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்துக்கள், ஆபத்துக்காலங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற தருணங்களில் மனித உயிர்களைகாத்து விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்துவகையான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் ஆயுதப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணி சேவைத்துறையினர் ஆகியோர் தம்முடைய பணி நேரத்தின்போது அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் அவர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 1-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 July 2022 8:57 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?