விழுப்புரத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பிப்போம் பேரணி
பெண்குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது.
Girl Child Protection- விழுப்புரத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில் இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரித்தல் போன்ற நோக்கத்தின் அடிப்படையில் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது என தெரிவித்தார்.
இப்பேரணியில் மாவட்டத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu