விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு

விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு
X

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தேசிய வாக்காளர் தினம் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி.

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 12-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்காளர் தின உறுதிமொழியினை இன்று (25.01.2022) எடுத்துக்கொண்டனர்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கி.அரிதாஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!