தலைவர்கள் திருவுருவ சிலைக்கு மலர் தூவி வரவேற்ற அமைச்சர் பொன்முடி

தலைவர்கள் திருவுருவ சிலைக்கு மலர் தூவி வரவேற்ற அமைச்சர் பொன்முடி
X

அலங்கார ஊர்தியை வரவேற்ற அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம் வந்திருந்த அலங்கார வாகனத்தில் தேசிய தலைவர்களின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் பொன்முடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, இந்திய சுதந்திர போராட்டத்தில், தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டு, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வ.உ.சி அலங்கார ஊர்தி மற்றும் ஈ.வெ.ரா பெரியார் அலங்கார ஊர்தி ஆகிய இரண்டு அலங்கார ஊர்திகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டது. பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார ஊர்தியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பார்வையிட்டு, தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சக்தி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!