மாணவி சிந்துஜாவிற்கு மடிக்கணணி

மாணவி சிந்துஜாவிற்கு மடிக்கணணி
X

மாணவி சிந்துஜாவிற்கு மடிக்கணினியை விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் வழங்கினார்

மடிக்கணினி வாங்க சேர்த்துவைத்த பணத்தை முதல்வர் கொரானா நிவாரணத்திற்கு அனுப்பிய மாணவிக்கு இன்று மடிக்கணினி வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 வகுப்பு மாணவி சிந்துஜா மடிக்கணினி வாங்க தான் உண்டியலில் சேர்த்து வந்த பணத்தை கடந்த 11 ந்தேதி தமிழக முதல்வர் கொரானா நிவாரணத்திற்கு அனுப்பினார், அவரை தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் வே.இறையன்பு உட்பட பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாணவி சிந்துஜாவிற்கு இன்று வியாழக்கிழமை மடிக்கணினியை விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் வழங்கினார், அப்போது மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பீசிங் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி