/* */

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்று பாலத்தின் அடிப்பகுதியில் மண்ணரிப்பு

Thenpennai River -விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள பாலத்தில் அடிப்பகுதியில் வெள்ளத்தினால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்று பாலத்தின் அடிப்பகுதியில் மண்ணரிப்பு
X

விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்று பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Thenpennai River -சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது, இந்த பாலம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய மேம்பாலமாக உள்ள இந்த பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருவதால் இந்த மேம்பாலத்தில் எந்நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும்.இந்த பாலத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக எல்லீஸ்சத்திரம், தளவானூர், பிடாகம் உள்ளிட்ட பகுதிகளில் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் பிடாகம் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் அங்குள்ள மேம்பாலத்தின் 5-வது கான்கிரீட் தூண் அருகே மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்தும் வருகிறது. இது தொடர்ந்து நீடித்தால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதோடு பாலமும் சேதமடையும் நிலை ஏற்படலாம்.

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை கட்டுமானத்துறை அதிகாரிகள் பாலத்தின் அடிப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் மணல், கற்களை கொட்டி சமப்படுத்துவதோடு பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Sep 2022 10:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?