வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் 100 சதவீதம் இணைத்தவர்களுக்கு பாராட்டு

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் 100 சதவீதம் இணைத்தவர்களுக்கு பாராட்டு
X

விழுப்புரத்தில் நூறு சதவீத வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்த வாக்கு சாவடி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

Aadhaar Card Voter Card Link -வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் முடித்தவர்களுக்கு விழுப்புரம் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

Aadhaar Card Voter Card Link -விழுப்புரம் மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளர் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி விழுப்புரம் மாவட்டத்தில் தீவிரமாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இப்பணியில் படிவம்-6 பி மூலம் வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்ணை 100 சதவீதம் முழுமையாக பெற்று அப்பணியை முடித்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட சிறப்பாக பணியாற்றிய 31 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார்.

அப்போது கலெக்டர் மோகன் கூறியதாவது:-

வாக்காளர் அடையாள அட்டையுடன் 1.8.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 10 லட்சத்து 50 ஆயிரத்து 670 வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண் விபரங்களை வாங்கி அதனை படிவம் 6 பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாக்காளர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம்-6 பி பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் எண் இல்லையெனில் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் மோகன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) சரஸ்வதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று இப்பணி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இந்த சான்றிதழ் மாவட்ட கலெக்டர் வழங்கியது ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் இது போன்ற சான்றிதழை பெற வேண்டி அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் தீவிரமாக பணிபுரிய இந்த பாராட்டு சான்றிதழ, ஒரு ஊக்கமாக அமையும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்பாக மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai as the future