விழுப்புரம் சட்ட கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விழுப்புரம் சட்ட கல்லூரியில் பட்டமளிப்பு விழா
X

விழுப்புரம் சட்டக்கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா

விழுப்புரம் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பட்டங்களை வழங்கினார்.

விழுப்புரத்தில் கடந்த 2019 ல் தொடங்கப்பட்ட விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் படித்து முடித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு திங்கட்கிழமை பட்டமளிப்பு நிகழ்ச்சி விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் தலைமை தாங்கி படித்து முடித்து பட்டம் பெற்ற 45 மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கி, வாழ்த்து தெரிவித்து பாராட்டிப் பேசினார்,

முன்னதாக சட்டக் கல்லூரி முதல்வர் ந.கயல்விழி அனைவரையும் வரவேற்று தொடக்க உரையாற்றினார், நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ்குமார்,அரசு செயலர் சட்ட விவகாரங்கள் எஸ்.கார்த்திகேயன், சட்டக் கல்லூரி இயக்குனர் சி.சொக்கலிங்கம், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்,

நிகழ்ச்சியில் அமைச்சர் கே எஸ் மஸ்தான், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் கௌரி, சேலம் சட்டக்கல்லூரி முதல்வர் துர்க்கா லட்சுமி, தர்மபுரி சட்டக்கல்லூரி முதல்வர் சிவகாமி,எம்எல்ஏக்கள் புகழேந்தி, டாக்டர்.லட்சுமணன் ஆகியோர் உட்பட பலர்சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், நிகழ்ச்சியின் முடிவில் சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் ராமஜெயம் நன்றி கூறினார்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்