விழுப்புரத்தில் முப்படை தளபதிக்கு ஊடகவியலாளர்கள் அஞ்சலி

விழுப்புரத்தில் முப்படை தளபதிக்கு ஊடகவியலாளர்கள் அஞ்சலி
X

விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதிக்கு விழுப்புரத்தில் ஊடகவியலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மாவட்ட ஊடகவியலாளர்கள் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

குன்னூரில் நாட்டின் முப்படைகளுக்கும் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் வீர மரணம் அடைந்தனர், அவர்களுக்கு விழுப்புரம் பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில், தலைவர் என்.சீதாராமன் தலைமையில் செய்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, மெழுகுவர்த்தி ஏந்தி முப்படைத்தளபதி உள்ளிட்ட 13 பேரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!