விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்
X

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

விழுப்புரத்தில் வரும் 27 ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு முகாமை விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வருகிற 27-ந்தேதி காலை 9 முதல் மாலை 4 வரை நடத்துகின்றன.

பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ள இந்த முகாமில், ஊரக, நகா்ப்புற இளைஞா்கள் கல்விச் சான்றிதழ்கள் (அசல், நகல்), குடும்ப அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பைத் தோ்வு செய்யலாம்.

கூடுதல் விவரங்களை அறிய ஊரக பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நகா்ப்புறபகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சிஅலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றைத் தொடா்பு கொள்ளலாம்.

அதேபோல, விழுப்புரம் மகளிா் திட்டஅலுவலகத்தையும் 04146-223736, 94440 94475 என்ற தொலைபேசி, கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!