அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி
X

தமிழக முதல்வர் ஸ்டாலின் 

அகவிலைப்படி உயர்வுக்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜாஸ்மின் அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்தனர்.

முதல்வருக்கு அமைச்சுப் பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கவிஞர் மா.ரா. சிங்காரம் நன்றியினை தெரிவித்து உள்ளார்,

அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, பல்வேறு நிதி நெருக்கடியிலும் அரசுப் பணியாளர்களுக்கு 1.1.2022 முதல் 14 சதவீதம் அகவிலைப்படியினையும் , பொங்கல் போனஸ் ரூ.3000 மும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்று பவர்களுக்கு ரூ.1000 மும் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு ரூ.500ம்,வழங்கி உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். என கூறியுள்ளார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!