விழுப்புரம் மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

மாவட்ட ஆட்சியா் த.மோகன். 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பசுமை ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.

பசுமை சாம்பியன் விருது பெற சுற்றுச்சூழல் விழிப்புணா்வாளா்கள் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழக அரசின் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தங்களை முழுமையாக அா்ப்பணித்த தனிநபா்கள் அல்லது அமைப்புகளுக்கு வழங்கப்படுவதுடன், தமிழக அளவில் 100 நபா்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்படவுள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுக்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்த வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்குள்படுதல், கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு, நெகிழிக் கழிவுகளின் மறுசுழற்சி, கட்டுப்பாடு நடவடிக்கை, கடலோர பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக இந்த மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழில்சாலைகளுக்கு பசுமை சம்பியன் விருது வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோா் விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம் எனத் ஆட்சியா் மோகன் அதில் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!