விழுப்புரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பணிக்கு நாளை நேர்காணல்
108 அவசரகால ஆம்புலன்சில் விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர், டிரைவர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு விழுப்புரத்தில் நாளை நடைபெற உள்ளது.
௧௦௮ ஆம்புன்ஸ் மிக முக்கியமான ஒரு சேவையாக உள்ளது. நோயாளிகளை வீட்டிற்கே வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிப்பது, சாலை விபத்து நடந்த இடங்களுக்கு உடனடியாக சென்று அவர்களின் உயிரை காப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர், டிரைவர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். இதற்கு பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி அல்லது லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், உயிரிவேதியியல், மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி முடித்திருக்க வேண்டும்). இப்பணிக்கு ரூ.15,435 ஊதியமாக வழங்கப்படும்.
டிரைவர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருபாலருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், பேட்ஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 செ.மீ. உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். இப்பணிக்கு ரூ.15,235 ஊதியமாக வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் கட்டாயம் அசல் சான்றிதழ் எடுத்து வருதல் வேண்டும். மேற்கண்ட தகவல் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu