விழுப்புரத்தில் எஸ்சி எஸ்டி.யினருக்கு மானியத்தில் கடன் உதவிக்கான நேர்காணல்

விழுப்புரத்தில் எஸ்சி எஸ்டி.யினருக்கு மானியத்தில் கடன் உதவிக்கான நேர்காணல்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினுக்கான மானிய கடன் உதவி திட்ட நேர்காணல்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று எஸ்சி எஸ்டி மக்களுக்கு மானியத்தில் கடன் உதவிக்கான நேர்காணல் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுய தொழில் புரிந்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கிட விண்ணப்பதாரர்களுக்கு நோகாணல் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் 29-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினுக்கான மானிய கடன் உதவி திட்ட நேர்காணலை தலைமை தாங்கி நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பொருளாதாரரீதியாக வாழ்க்கைதரத்தை மேம்படுத்திடவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நபர்களுக்கு தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டம், நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாடு திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளார கடனுதவி ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

வறுமையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்க்கு தமிழ்நாடு அரசாங்கம் முக்கியதுவம் அளித்து வருகிறது. சமுதாய மக்கள் தாட்கோ மூலம் வங்கிகடன் பெற்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றும் அவ்வாறு கடனுக்காக விண்ணப்பிக்கும் மக்கள் நேரடியாக அரசு அலுவலரை நேரில் சந்தித்து உரியவழிமுறைகளை பின்பற்றுப்படியும் இடைதரகர்களை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சுயமாக தொழில் துவங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குவதற்க்கு 72 நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், முப்பது சதவீத மானியத்துடன் இரண்டு மகளிர் சுயஉதவிக்குழுவினர் உறுப்பினர்களான விக்கிரவாண்டி வட்டாரம், சிறுவள்ளிக்குப்பம் ஊராட்சியினை சேர்ந்த திருமதி சித்ரா என்பவருக்கு ரூ.2,50,000/-கான கடனுதவியும், வல்லம் வட்டாரம், மேல்சித்தாமூர் ஊராட்சியினை சேர்ந்த மார்த்தாள் என்பவருக்கு ரூ.3,00,190/-த்திற்கான கடனுவதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் மரு.ரவிராஜா, தாட்கோ உதவி மேலாளா ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் நடக்கும் நேர்காணலில் வெற்றி பெற்று கடன் உதவிக்கு தகுதி பெற்ற பயனாளிகள் வங்கிகளை அணுகி கடனுதவி பெற்று கடன் கேட்டு தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு வங்கிகள் எஸ்சி மக்களுக்கு கடன் கொடுப்பதில் பல கிடக்குப்பிடிகளை போடுவது ஜாமின் கேட்டு அலைகழிப்பதும் அதன் காரணமாக தகுதியான தொழில் செய்ய விரும்பும் பெரும்பாலான எஸ் எஸ் டி மக்களுக்கு மானிய கடன் உதவி திட்டம் இன்னும் குதிரை கொம்பாகவே இருந்து வருகிறது என்பது நம் மக்கள் மத்தியில் நிலவு வரும் கருத்தாக உள்ளது இதனை அரசு கருத்தில் கொண்டு எஸ்சி மக்களின் கடன் உதவி திட்டத்தில் நேர்காணல் நடத்தி அவர்களுக்கு கடன் சம்பந்தப்பட்ட வங்கிகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!