விழுப்புரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்து அவர்களை சிறையில் அடைக்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வளர்மதி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் திலகவதி, மாவட்ட துணைச் செயலாளர் மாரியம்மாள், ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயமலர், மாணவர் அணி பொறுப்பாளர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!