விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளங்களில் நீர் வரத்து அதிகரிப்பு
பைல் படம்.
Villupuram News -விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 5-ந் தேதி வரை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதனால் விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை தொடர்ந்து பெய்தது வருகிறது. நள்ளிரவில் சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்த மழை தொடர்ந்து நீடித்தது வருகிறது. இதனால் மாணவ- மாணவிகளின் நலனை கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் நேற்றும், இன்றும் விடுமுறை அளித்தது.
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழையாக தூறியது. அதன் பிறகு 11 மணிக்கு மேல் மிதமான மழையாக சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கத்தொடங்கியது. தொடர் மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றச்செய்தனர்.
திண்டிவனம், மரக்காணம், வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுபோல் ஏற்கனவே தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரியாறுகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருவதோடு கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படவில்லை, ஆடு, மாடுகள் மற்றும் விலங்குகளின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு முடக்குவதற்கு இடமின்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் மாவட்ட நிர்வாகம் 6 ஏரி குளங்கள் பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் ஆடு மாடுகளை அனுப்ப வேண்டாம் என்றும் துணி துவைப்பதற்கு குளிப்பதற்கோ ஆறு ஏரி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என்றும் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதனால் அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu