விழுப்புரத்தில் புதுமைப்பெண் திட்டம் துவக்க விழா
மாணவிகளுக்கு வங்கி கையேடு வழங்கிய அமைச்சர் மஸ்தான்.
விழுப்புரம் சட்ட கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு,தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த புதுமை பெண் திட்டத்தை காணொளி மூலம் பார்த்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டத்தை தொடக்கி வைத்து மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான வங்கிக் கணக்குப் புத்தகம், உயர் கல்வி கையேட்டை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோர் பல்வேறு முன்னெடுப்புகளை செய்தனர். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்மெனில் கல்வி ஒன்றேற சிறறந்த ஆயுதம் என உணர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் மாணவிகளுக்கு பயனளிக்கும்.
இந்தத் திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 54 கல்லூரிகளைச் சார்ந்த 3,267 மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 92 லட்சத்து 4 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து முதல்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் 19 கல்லூரிகளைச் சேர்ந்த 788 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இனிமேல் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி மாணவிகள் உயர்கல்வி பயின்று ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைறகளிலும் சிறறந்து விளங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், மாவட்ட சமூக நலத் துறைற அலுவலர் ராஜம்மாள், நகர்மன்றறத் தலைவர்கள் தமிழ்ச்செல்வி (விழுப்புரம்), நிர்மலா (திண்டிவனம்), சட்டக் கல்லூரி முதல்வர் தங்கமணி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu