விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலில் 210 பதவிகளுக்கு 1247 பேர் போட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலில் 210 பதவிகளுக்கு 1247 பேர் போட்டி
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்புற தேர்தலில் 210 பதவிகளுக்கு 1247 பேர் போட்டியிடுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி 7 பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 210 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 28ந்தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி இன்று 4 ந்தேதி வரை நடைபெற்றது.

இன்று விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளும், திண்டிவனத்தில் 33 வார்டுகளும், கோட்டகுப்பத்தில் 27 வார்டுகளும், வளவனூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், விக்கிரவாண்டி 15 வார்டுகளும், செஞ்சி 18 வார்டுகளும், மரக்காணத்தில் 18 வார்டுகளும், திருவெண்ணெய்நல்லூரில் 15 வார்டுகளும்,அரகண்டநல்லூரில் 12 வார்டுகளும்,ஆனந்தபுரத்தில் 15 வார்டுகளும்,என 210 பதவிகளுக்கு மொத்தம் 1301 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர், இன்று வேட்புமனு பரிசோதனை முடிவில் களத்தில் 1247 பேர் போட்டி களத்தில் உள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு