விழுப்புரத்தில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை: ஆட்சியர் வழங்கல்

விழுப்புரத்தில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை: ஆட்சியர் வழங்கல்
X

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக வாக்காளர்களாக தேர்வு பெற்றுள்ள இளைஞர்களுக்கு, அடையாள அட்டையை கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக வாக்காளர்களாக தேர்வு பெற்றுள்ள இளைஞர்களுக்கு, அடையாள அட்டையை கலெக்டர் மோகன் வழங்கினார்.

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 12-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, 18 வயது பூர்த்தியடைந்து, வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்து வாக்காளர்களாக தேர்வு பெற்றுள்ள இளம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (25.01.2022) வழங்கினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!