நான் முதல்வர் திட்டம் தொடக்க விழா: காணொளியில் கண்டு களித்த விழுப்புரம் மாணவர்கள்

நான் முதல்வர் திட்டம் தொடக்க விழா: காணொளியில் கண்டு களித்த விழுப்புரம் மாணவர்கள்
X

 நான் முதல்வன் திட்ட தொடக்க நிகழ்வை காணொளி காட்சி மூலம் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் 

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தை விழுப்புரம் பள்ளி மாணவர்கள் காணொளி மூலம் பார்த்தனர்

நான் முதல்வன் திட்ட தொடக்க விழாவை விழுப்புரத்தில் பள்ளி மாணவர்கள் காண்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் (01.03.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், பள்ளி, கல்லூரி மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டமான "நான் முதல்வன்" என்கிற புதிய திட்டம் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியை, விழுப்புரம் மாவட்டம்,கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் காணொளி காட்சி வாயிலாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் த.மோகன், நேரில் சென்று பார்வையிட்டு, அந்த திட்ட தொடக்க விழா நிகழ்ச்சியை மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து, காணொளியில் பார்த்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.கோ.கிருஷ்ணப்பிரியா உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்