கர்ப்பிணி பெண்போலீசாருக்கு விடுமுறை

கர்ப்பிணி பெண்போலீசாருக்கு விடுமுறை
X
விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா பாதுகாப்பு பணியில் இருந்து கர்ப்பிணி பெண் போலீசாருக்கு விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் கொரானா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கர்ப்பிணி பெண் போலீசாரும் உள்ளனர், இவர்கள் அச்சத்துடனே பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கொரானா ஊரடங்கு மறு உத்தரவு வரும் வரை பணியில் இருக்கும் கர்ப்பிணி பெண் போலீசாருக்கு சிறப்பு விடுமுறை அளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெண் போலீசார் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!