இந்து கோவில்களுக்கு தனி நலவாரியம் அமைக்க இந்து முன்னணி கோரிக்கை

அங்காளம்மன் கோவில் பைல் படம்.
Hindu Temples in Tamilnadu -இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் கடந்த 28-ந் தேதி திருச்செந்தூரில் தொடங்கியது. இப்பயணம் வருகிற 31-ந் தேதி சென்னையில் முடிவடைகிறது. அந்த வகையில் விழுப்புரம் வந்த இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில்
இப்பிரசார பயணத்தில் இந்து மக்கள் எழுச்சியுடன் பங்கேற்கிறார்கள். அவர்கள் இந்து கோவில்கள் சம்பந்தமாக தருகின்ற மனுக்களை சென்னை சென்றவுடன் முதல்-அமைச்சர் அல்லது தலைமை செயலாளரிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க வேண்டும்.
இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, தனிவாரியம் அமைத்து அதில் கோவில்களை ஒப்படைக்க வேண்டும். பொன்.மாணிக்கவேல் போன்ற ஓய்வு பெற்ற அதிகாரிகளை அங்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து விநாயகர் சிலைகளை தயாரித்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அவர்கள் இடையூறின்றி தொழில் செய்ய போதிய நிதியுதவி வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் ஆவணப்படி 5¼ லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 50 ஆயிரம் ஏக்கர்களை காணவில்லை என்கிறார்கள். அவற்றை போலி ஆவணம் தயாரித்து அபகரித்திருப்பார்கள். அதனை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்றார்.
அப்போது மாநில செயலாளர் மனோகரன், கோட்ட தலைவர் சிவா, மாவட்ட தலைவர் சதீஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu