ஆஸ்ரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சி.பி.எம். சார்பில் உதவி

ஆஸ்ரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சி.பி.எம். சார்பில் உதவி
X

ஆஸ்ரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள ஆஸ்ரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிபிஎம் கட்சி சார்பில் உதவி செய்யப்பட்டது.

விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் உள்ள காப்பகத்தில் நடந்துள்ள அத்துமீறல் பற்றி முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சி.பி.எம். மாவட்ட குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் டி. ரவீந்திரன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார். ஜி.ராஜேந்திரன். ஏ.சங்கரன், ஆர்டி.முருகன்,விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.நாகராஜன், கே.வீரமணி, ஆகியோர் புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்,

அந்த மனுவில் கூறப்பட்டு இருடுப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் செஞ்சி- விழுப்புரம் சாலை குண்டலப்புலியூர் பகுதியில், அன்பு ஜோதி ஆஸ்ரமம் என்ற பெயரில் ஒரு சிறிய கட்டிடத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஷோபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியாள் ஆகியோர் முறையான அனுமதி பெறாமல், ஆஸ்ரமம் நடத்தி வந்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரப்பட்ட இந்த ஆஸ்ரமத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் மற்றும் வடமாநிலங்களிலிருந்தும் 150 க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு, தொடர்ந்து சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். அதில் அனுமதிக்கப்பட்டவர்களை விவசாய வேலைக்கு பயன்படுத்துவது, மாடு மேய்க்க விடுவது, அப்படி செய்யாதவர்களை, அடித்து சித்தரவதைக்குள்ளாக்குவது என தொடர்ந்து செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ஹனிதீன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு ஜாபருல்லா என்கிற (45 வயது) நபரை மேற்கண்ட ஆஷ்ரமத்தில் சேர்ந்துவிட்டு சென்றுள்ளார். பிறகு ஓராண்டு கழித்து மேற்கண்ட ஆஷ்ரமத்தில் சென்று பார்த்தபோது மேற்கண்ட ஜாபருல்லா என்பவரை காணவில்லை, அதோடு அதோடு முன்னுக்கு பின் முரணாக ஆஷ்ரமத்தை சார்ந்தவர்கள் பேசியதால் ஹனிதீன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனால் கெடார் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து அங்குள்ள பணியாளர்கள் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆஷ்ரமத்தில் தங்கி இருந்த ஒரு பெண் தன்னை பாலியல் வன்புணர்ச்சி மற்றும் பலாத்காரம் செய்ததாக ஆஸ்ரமம் நடத்தி வருபவர்கள் மீது காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும் அதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. சம்மந்தப்பட்ட பெண் என்னை போல மேலும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கூறியுள்ளார்.

சங்கரன் கோவில் காப்பாகுளம் கிராமத்தை சேர்ந்த லட்சுமியம்மாள் அவரது மகன் முத்துவிநாயகம் (வயது 48) ஆகிய இருவரையும் அன்பு ஜோதி ஆஸ்சிரமத்தில் 11-08-2021 தேதியில் சேர்த்தாகவும் அவர்களை காணவில்லை என்றும் அவரது சகோதரர் புகார் அளித்துள்ளார்.

இது போல ஆஸ்ரமத்தில் பலர் சேர்க்கப்பட்டதாக கூறுகிறார்கள். இத்தகு நிலையில் பலரை காணவில்லை ஆஷ்ரமத்தை சீல் வைத்து அங்கிருந்தவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தை துவக்கி பணம் வசூல் செய்து கொள்வது, ஆஸ்ரமத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு பலாத்காரம் செய்வது, அடித்து சித்ரவதை செய்வது உட்பட மனித உரிமை மீறல்களும், கொடுமைகளும் நடைபெற்றுள்ளது தெரிய வருகிறது. அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் நடந்தது குறித்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டும். காணாமல் போனவர்கள் குறித்து கண்டறிந்து தெரிவிக்க வேண்டும். அனுமதி இன்றி இத்தகு முறையில் ஆஸ்ரமம் நடத்த மாவட்ட நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்பது உட்பட முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுபோல அனுமதியின்றி நடத்தப்படும் மனநல காப்பகங்கள், ஆஸ்ரமங்களை ஆய்வு செய்து முறைப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

முன்னதாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள 143 பேரையும் சி.பி.எம். கட்சியினர் நேரில் சந்தித்து விசாரணை செய்து அவர்களுக்கு பிஸ்கட், பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!