விழுப்புரத்திற்கு வந்த அதி நவீன ஆய்வக வாகனம் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
விழுப்புரத்திற்கு வந்த அதிநவீன வாகனம் போலீஸ் தடய அறிவியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 01.07.2022-ம் தேதி தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்து வழங்கினார்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர பாபு உத்தரவுப்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வாகனம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தடைந்தது.
இந்நிலையில்இந்த வாகனம், இன்று 04.07.2022 ம் தேதி விழுப்புரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் எம்.பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என்.ஸ்ரீநாதா ஆகியோரால் விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துறை துணை இயக்குநர் சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu