விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு
பைல் படம்
விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கல் காவல் நிலையத்தில் ஒப்படைக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இந்நிலையில், உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அதனை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நரிக்குறவர்கள் என மொத்தம் 221 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இவர்களிடம் தேர்தல் விதிமுறைப்படி துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கும்படி ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 177 பேர், தாங்கள் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். இன்னும் 15 பேரிடம் ஓரிரு நாட்களுக்குள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்ட போலீசார் மூலமாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் உள்ள 29 வங்கிகளில் துப்பாக்கிகள் உள்ளது. அவற்றை பாதுகாப்பாக வங்கிகளிலேயே வைத்திருக்கும்படி வங்கி அதிகாரிகளுக்கு போலீஸ் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu