கல்வி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி: ரவிக்குமார் எம்பி கண்டனம்
விழுப்புரம் எம்பி ரவிக்குமார்
இதுகுறித்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேனா, பென்சில், ரப்பா், நோட்டுப் புத்தகங்கள் முதலான கல்வி சாா்ந்த உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கும்,மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது குறித்தஅரசின் நிலைப்பாடு, பெட்ரோல், டீசல் மீதான செஸ், சா்சாா்ஜ் போன்ற கூடுதல் வரிகளை உயா்த்தும் திட்டம் ஏதேனும் அரசிடம் இருக்கிா என்று மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தேன்.அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் பதிலளித்தாா்.
அதில், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜிஎஸ்டி விகிதங்கள் நிா்ணயிக்கப்படுகின்றன. பேனா, பென்சில், ரப்பா், நோட்டுப் புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடா்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிந்துரை எதுவும் தற்போது இல்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல், அறுவை சிகிச்சை பெல்ட்கள் முதலான சாதனங்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயா்த்தும் திட்டம் தற்போது இல்லை என்று பதிலளித்திருந்தாா்.
மாணவ சமுதாயம் அதிகம் பயன்படுத்தும் கல்வி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்காமல் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது என அறிக்கையில் துரை.ரவிக்குமாா் எம்.பி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu