விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வுடன் உதவி தொகை ஆணை

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வுடன் உதவி தொகை ஆணை
X
விழுப்புரம் மாவட்டம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு செய்து உதவி தொகைக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்று திறனாளிகள் முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வயது வரம்பினை தளர்த்தி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் மோகன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி) பெருமாள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story