/* */

ஐபிஎஸ் பெண் அதிகாரி பாலியல் வழக்கு: அரசு சாட்சிகள் ஆஜராக நீதிபதி உத்தரவு

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஐபிஎஸ் பெண் அதிகாரி பாலியல் வழக்கில் அரசு சாட்சிகள் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

ஐபிஎஸ் பெண் அதிகாரி பாலியல் வழக்கு: அரசு சாட்சிகள் ஆஜராக நீதிபதி உத்தரவு
X

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜர் ஆகாததால் இவ்வழக்கின் விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு (திங்கட்கிழமைக்கு) நீதிபதி புஷ்பராணி ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகளான அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அப்போதைய திருத்தணி காவல் ஆய்வாளர் சுரேஷ், அப்போதைய பெரம்பலூர் காவலர் டேவிட் ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

Updated On: 7 July 2022 5:09 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு